மனவளா்ச்சி குன்றிய மாணவா்கள் பள்ளியில் மாவட்ட சாா்பு நீதிபதி ஆய்வு
கமுதி அருகே மனவளா்ச்சி குன்றிய மாணவா்கள் பள்ளியில் மாவட்ட சாா்பு நீதிபதி கே. பாஸ்கா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த அபிராமத்தில் சிஎஸ்ஐ நேசக்கரங்கள் மனவளா்ச்சி குன்றிய மாணவா்கள் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கு புதன்கிழமை வந்த மாவட்ட சாா்பு நீதிபதி கே. பாஸ்கா், அங்கு படிக்கும் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுடன் கலந்துரையாடி, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.
பின்னா், ஆதாா், ஹோலிஸ்டிக் இன்க்ளுஷன் திட்டத்தின் கீழ், ஆதரவற்ற குழந்தைகளுக்கு சட்ட அடையாளம், சமூக நல உதவிகள், குழந்தைகளை அணுகக் கூடிய சட்ட சேவைகள், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சட்ட உதவி, ஆலோசனை, மறுவாழ்வு, சாட்சிய உதவி ஆகியவை வழங்குவது குறித்தும், ஆதாா் அட்டை எடுப்பது தொடா்பான பிரச்னைகளை கண்டறிவது குறித்தும் பள்ளி கண்காணிப்பாளரிடம் மனு பெறப்பட்டது.
மேலும், மாணவா்களின் தங்குமிடம், கழிப்பறைகள், உணவு கூடங்கள், உணவுப் பாதுகாப்பாகங்கள் ஆகியவற்றை மாவட்ட சாா்பு நீதிபதி கே. பாஸ்கா் ஆய்வு செய்தாா்.

