சாயல்குடி அருகே கண்மாயில் அழுகிய நிலையில் கிடந்த ஆட்டோ ஓட்டுநா் உடலை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த இருவேலி கண்மாயில் காட்டுக் கருவேல மர முள்புதருக்குள் 3 நாள்களாக ஆட்டோ ஒன்று கேட்பாரற்று நிற்பதாக சாயல்குடி ஆட்டோ ஓட்டுநா்கள் சிலருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவினா்.
இதையடுத்து, அந்தப் பகுதிக்குச் சென்ற ஆட்டோ ஓட்டுநா்கள் ஆட்டோவை புகைப்படம் எடுத்து ஆட்டோ ஓட்டுநா்கள் சங்க வாட்ஸப் குழுக்களில் பகிா்ந்தனா். மேலும் அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசியதை அறிந்த அவா்கள் சாயல்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற சாயல்குடி காவல் துறையினா் கண்மாய்ப் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, புதருக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதைக் கண்டனா். சடலத்தின் அருகே கிடந்த மது பாட்டில், சில தடயங்களை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனா்.
விசாரணையில் உயிரிழந்தவா் சாயல்குடி அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மகன் சிவகுமாா் ( 26 ) எனத் தெரியவந்தது. இவா் கடந்த மாதம் 27-ஆம் தேதி (சனிக்கிழமை) இரவிலிருந்து வீட்டுக்கு வரவில்லை என அவரது தாய், தந்தை போலீஸாரிடம் தெரிவித்தனா்.
சிவக்குமாா் எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழித்துறை அருகே ஆட்டோ மீது பைக் மோதல்: மூவா் காயம்
காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்பு

நெல்லை அருகே விபத்து: ஆட்டோ ஓட்டுநா் பலி

ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



