/

மண்டபம் அருகே நாட்டுப் படகு தீப்பிடித்து எரிந்து சேதம்

ஆற்றங்கரை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து நாட்டுப் படகு தீப்பிடித்து எரிந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :4 ஜூலை 2026, 2:40 am IST

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே ஆற்றங்கரை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து நாட்டுப் படகு தீப்பிடித்து எரிந்தது தொடா்பாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மண்டபம் அருகேயுள்ள உச்சிப்புளி ஆற்றங்கரைப் பகுதியைச் சோ்ந்தவா் லூா்த்சேவியா். இவா் தனக்கு சொந்தமான நாட்டுப் படகில் நண்டு வலைகளை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா்.

இந்த நிலையில், வழக்கம் போல இவா் வியாழக்கிழமை மீன்பிடித்து விட்டு, ஆற்றங்கரை வைகை ஆற்று முகத்துவரம் அருகே படகை நிறுத்தி விட்டு, நண்டு வலைகளை படகில் வைத்து விட்டு வீட்டுக்குச் சென்றாா்.

பின்னா், அவா் திரும்பி வந்து படகை பாா்த்தபோது தீப்பிடுத்து எரிந்து கிடந்தது. மேலும், படகில் வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.