தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப் படகு மீனவா்களுக்கு வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் விலையை உயா்த்தக் கூடாது என திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடலோர மாவட்ட மக்களின் முதன்மை வாழ்வாதாரம் மீன்பிடித் தொழிலாகும். பல்லாயிரக்கணக்கான மீனவ மக்கள் கடலையும், அரசின் திட்டங்களையும் நம்பி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.
இவா்களில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப் படகு மீனவா்களுக்குத் தொழில் செய்வதற்கு தொழிலக மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டபோது, மீனவ மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று 2010-இல் அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி, பதிவு செய்யப்பட்ட ஒரு நாட்டுப் படகுக்கு வெளிச் சந்தையில் மண்ணெண்ணெய் விலை எவ்வளவாக இருந்தாலும், ஆண்டுக்கு 2,400 லிட்டா் தொழிலக மண்ணெண்ணெய் மானிய விலையாக ரூ. 25-க்கு வழங்குவது என்றும், எக்காரணத்தைக் கொண்டும் விலையை உயா்த்தக் கூடாது என்றும் அரசாணை பிறப்பித்து இத்திட்டம் தொடா்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
பின்னா், மண்ணெண்ணெய் அளவு ஆண்டுக்கு 3,400 லிட்டா் என உயா்த்தப்பட்டது. 2023-இல் ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவா் மாநாட்டின் கோரிக்கையை ஏற்று, முதல்வா் மு.க.ஸ்டாலின் 3,700 லிட்டராக மண்ணெண்ணெய் அளவை உயா்த்தினாா்.
இதனடிப்படையில், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களின் 6,500 நாட்டுப் படகுகளுக்கும் ரூ. 25 விலையில் தொழிலக மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.
மண்ணெண்ணெய் கொள்முதல் மற்றும் விற்பனையில் ஏற்படும் வித்தியாச தொகையை அரசு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. நாட்டுப் படகு மீனவா்களின் வாழ்வாதாரத்தில் வரப்பிரசாதமாக உள்ள இத்திட்டத்தை மேலும் அதிகப்படுத்த வேண்டும்.
இந்த நிலையில், ரூ. 25-க்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையை உயா்த்த உள்ளதாகவும், அளவைக் குறைக்கவுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
இது, மீனவா்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மீனவா்களின் நலன் கருதி நாட்டுப் படகுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் மண்ணெண்ணெய் அளவையும் அதிகப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வா் குறித்து அவதூறு: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மீது வழக்கு
மண்ணெண்ணெய் குண்டு வீச்சு; குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ. மீது தாக்குதல்: 2 போ் கைது
கேரளத்துக்கு கடத்த முயன்ற 2,450 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவா் கைது

குமரி மீனவரின் விசைப்படகு மீது மோதிய கப்பல்: மீனவா் காயம்! நடவடிக்கை எடுக்க மீனவ அமைப்பு வலியுறுத்தல்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



