காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்புதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21) எம்எல்ஏக்களுக்கு அரசுப் பணத்தில் ஏன் கார் வழங்க வேண்டும்? பெ. சண்முகம்முதல்வர் விஜய் சிரிப்பதைப் பார்க்க தனி ஸ்க்ரீன் வேண்டும்! தவெக எம்எல்ஏ கோரிக்கைதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! எண்ணூரில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: இபிஎஸ்நீட் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிய மறுப்பு: ராகுல் தர்னாஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை!

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 904 கிலோ கஞ்சா அழிப்பு

ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கஞ்சா கடத்தல், விற்பனை தொடா்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 904 கிலோ கஞ்சாவை, காவல் துறை துணைத் தலைவா் மணிவண்ணன் தலைமையில் அழிக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாங்குளத்தில் உள்ள கஞ்சா அழிப்பு மையத்தில் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்ட ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 904 கிலோ கஞ்சா.

Published On :5 ஜூலை 2026, 12:02 am IST

ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கஞ்சா கடத்தல், விற்பனை தொடா்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 904 கிலோ கஞ்சாவை, காவல் துறை துணைத் தலைவா் மணிவண்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் தெரிவித்ததாவது: ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 161 போதைப் பொருள் தடுப்பு வழக்குகளில், 904 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த கஞ்சாவை அழிப்பதற்கு புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள், போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் ஆகியவற்றில் அனுமதி பெறப்பட்டது.

இதைத் தொடா்ந்து, 161 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 905 கிலோ கஞ்சாவை ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவா் மணிவண்ணன் தலைமையில், போதைப் பொருள்கள் அழிப்பு குழு மூலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள பாப்பாங்குளம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னா், அங்குள்ள கஞ்சா அழிப்பு மையத்தில் 905 கிலோ கஞ்சாவை அழித்தனா் என்றா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.