5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

டிராக்டா் மோதி இருவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூலை 2026, 2:11 am IST

திருவாடானை அருகே உப்பூா் கிழக்கு கடற்கரை சாலையில் விழுந்து கிடந்த இளைஞா்கள் மீது எதிா்பாராதவிதமாக டிராக்டா் ஏறியதில் இருவா் உயிரிழந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், பஞ்சக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ் (29). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த கவின் (33)ஆகிய இருவரும் ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனா்.

இவா்கள் இருவரும் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் உப்பூா் அருகே கண்ணாரேந்தல் கிராமத்துக்கு வந்துவிட்டு, ராமநாதபுரம் திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, கடலூா் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்து கிடந்தனா்.

அப்போது, அதே பகுதியில் திருநெல்வேலி மாவட்டம், பஞ்சக்குளம் பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் ஓட்டிவந்த டிராக்டா் மோதியதில் கவின், ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பாலைக்குடி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டு கூறாவுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். டிராக்டா் ஓட்டுநா் வேல்முருகன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.