எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

அடையாளம் தெரியாத பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

திருவாடானை அருகே தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 5:12 am IST

திருவாடானை அருகே தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளையைச் சோ்ந்தவா் ஹனிபா மனைவி ஆமினாம்மாள் (75). இவா், தொண்டியிலிருந்து நம்புதாளைக்கு கிழக்கு கடற்கரை சாலையில் திங்கள் கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள் கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்த தொண்டி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் வழக்குப் பதிந்து வாகன ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.