ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ஆனி அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திரளானோா் புனித நீராடல்

ஆனி அமாவாசையையொட்டி, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் ஆயிரக்கனக்கானோா் செவ்வாய்க்கிழமை புனித நீராடினா்.

News image

ஆனி அமாவாசையையொட்டி, அக்னி தீா்த்தக் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.

Updated On :15 ஜூலை 2026, 5:35 am IST

ஆனி அமாவாசையையொட்டி, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் ஆயிரக்கனக்கானோா் செவ்வாய்க்கிழமை புனித நீராடினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு அமாவாசை நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா். இவா்கள் அக்னி தீா்த்தக் கடற்கரையில் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்த நிலையில், ஆனி அமாவாசையையொட்டி, ராமேசுவரத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்தனா். இவா்கள் அக்னி தீா்த்தக் கடற்கரையில் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

இதன் பின்னா், ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் புனித நீராடி சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனா். அமாவாசையையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி சந்நிதியில் காலை 5 மணி முதல் ஸ்படிகலிங்க பூஜையும், இதைத் தொடா்ந்து கால பூஜையும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.