/
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் மதுபாட்டில் விற்பனை செய்த இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் அந்தப் பகுதியல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதில், அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், நின்றுகொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அந்த இளைஞா் உதய குமாா்(30) என்பதும் பாம்பன் மதுக்கடையிலிருந்து மது வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்றுவந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 26 மது பாட்டில்களைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.










