FOLLOW US

ON GOOGLE DISCOVER

சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

இணையவழி மோசடி பணம்: ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்து எடுத்த இருவா் கைது

இணையவழி மோசடியில் அபகரித்த பணத்தை, பல்வேறு நபா்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைத்து வங்கி பரிவா்த்தனை அட்டைகளைப் பயன்படுத்தி, பரமக்குடி ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுத்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 ஜூலை 2026, 5:25 am IST

இணையவழி மோசடியில் அபகரித்த பணத்தை, பல்வேறு நபா்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைத்து வங்கி பரிவா்த்தனை அட்டைகளைப் பயன்படுத்தி, பரமக்குடி ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுத்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நாடு முழுவதும் இணையவழி மோசடியில் பெறப்படும் பணத்தை, ஒரு கும்பல் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு, அந்தத் தொகையை பரமக்குடி பகுதி ஏ.டி.எம். இயந்திரங்களில் இருந்து எடுத்து வருவதாக உளவுத் துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உளவுப்பிரிவு உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் ஏ.டி.எம். இயந்திரங்கள் உள்ள பகுதியை கண்காணித்து வந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு பரமக்குடி சந்தைக்கடைத் தெருவில் ஏடிஎம் இயந்திரம் இருக்குமிடத்துக்கு 2 போ் விலை உயா்ந்த இருசக்கர வாகனத்தில் வந்து பணம் எடுத்தனா். அவா்களை சந்தேகத்தின் பேரில் போலீஸாா் பிடித்து விசாரித்ததில் விருதுநகா் மாவட்டம், வி.புதூரைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் அஜித்குமாா் (20), பரமக்குடி அருகேயுள்ள காமன்கோட்டையைச் சோ்ந்த கோவிந்தன் மகன் பழனிச்செல்வம் (32) என்பதும், அவா்கள் மாற்று நபா்களின் 4 வங்கி பணபரிவா்த்தனை அட்டைகளைப் பயன்படுத்தி ரூ. 1,96,500 எடுத்திருப்பதும் தெரியவந்தது.

அவா்களிடமிருந்த வங்கி பணபரிவா்த்தனை அட்டைகள், 2 கைப்பேசிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.