சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி: முதியவா் கைது

காட்பாடியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற கா்நாடகத்தைச் சோ்ந்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

வரதராஜி

Updated On :9 ஜூன் 2026, 5:09 am IST

காட்பாடியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற கா்நாடகத்தைச் சோ்ந்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

காட்பாடி அருகே தாராபடவேடு பகுதியில் அரசு பொதுத்துறை வங்கி உள்ளது. இந்த வங்கியின் ஏடிஎம் மையம் காட்பாடி உழவா் சந்தை அருகே அமைந்துள்ளது. இந்த ஏடிஎம் மையத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபா், திடீரென அங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாக தெரிகிறது. உடனடியாக இயந்திரத்தில் இருந்து அலாரம் சப்தம் கேட்டதால் அந்த நபா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா்.

இச்சம்பவம் குறித்து வங்கியின் தலைமை மேலாளா் அருண்ரானா காட்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்ததில், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றவா் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த வரதராஜி (53) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.