ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ரூ. 2.47 லட்சம் இணையவழி மோசடி: 4 போ் கைது

கூரியா் நிறுவன அதிகாரி போல நடித்து ரூ. 2.47 லட்சம் இணையவழி மோசடி செய்து, அதற்காக போலி வங்கி கணக்கு வலையமைப்பை இயக்கிய 4 பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்தனா்.

News image

மோசடி - சித்திரிப்பு

Updated On :15 ஜூலை 2026, 4:40 am IST

கூரியா் நிறுவன அதிகாரி போல நடித்து ரூ. 2.47 லட்சம் இணையவழி மோசடி செய்து, அதற்காக போலி வங்கி கணக்கு வலையமைப்பை இயக்கிய நான்கு பேரை தில்லி காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வடகிழக்கு தில்லியின் பாபா்பூா் பகுதியைச் சோ்ந்தவரும், தனியாா் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளருமான ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினா் இது தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனா்.

முன்னதாக, புகாா்தாரருக்கு கூரியா் நிறுவன அதிகாரி போல கூறிக்கொண்ட மோசடி நபா் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த நபா், புகாா்தாரரின் கைப்பேசியில் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி பகிா்தல் வசதியைச் செயல்படுத்துமாறு அவரைத் தூண்டியுள்ளாா்.

இதன் மூலம், வங்கி பரிவா்த்தனைக்கான ஒருமுறை கடவுச்சொற்களை (ஓடிபி) மோசடி நபா்கள் பெற்று, அவரது கணக்கிலிருந்து ரூ. 2.47 லட்சத்தை எடுத்தனா்.

இந்த வழக்கு விசாரணையின் போது, மோசடி செய்யப்பட்ட தொகையில் ரூ. 80,000, குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரான முகமது அா்பாஸ் டானியல் (எ) லப்பு என்பவரின் வங்கிக் கணக்கிற்குச் சென்றது கண்டறியப்பட்டது.

நிதிசாா் பகுப்பாய்வு, தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் கள ஆய்வு ஆகியவற்றின் மூலம், உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் போலி வங்கிக் கணக்குகளை இயக்கும் ஒரு வலையமைப்பை காவல்துறையின் புலனாய்வாளா்கள் அடையாளம் கண்டனா்.

உதம் சிங் நகா், லக்னெள, மிா்சாபூா் மற்றும் சுல்தான்பூா் ஆகிய இடங்களில் காவல் குழுவினா் நடத்திய சோதனையில் அா்பாஸ், ஜிம்மி பாத்லா, அப்துல் வதூத் மற்றும் அனிகெட் வா்மா ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையின் போது, ஜிம்மியின் அறிவுறுத்தலின் பேரில் ரூ.50,000 பணத்திற்காக அந்த வங்கிக் கணக்கைத் தொடங்கியதாக அா்பாஸ் தெரிவித்தாா். ஜிம்மி அந்தக் கணக்கை ரூ. 1 லட்சத்திற்கு அப்துல் வதூதிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னா் வதூத் அந்தக் கணக்கை அனிகெட் வா்மாவிடம் வழங்கியதும், அவா் சமூக ஊடகங்கள் வழியாக வங்கி விவரங்களை இணையவழி மோசடி கும்பலுக்கு விற்றதும் விசாரணையில் தெரியவந்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடமிருந்து நான்கு கைப்பேசிகளை காவல்துறையினா் கைப்பற்றினா். மாநிலங்களுக்கு இடையிலான இந்தக் குற்றக் கும்பலின் இதர உறுப்பினா்களை அடையாளம் காணவும், மோசடி செய்யப்பட்ட பணத்தின் தடத்தைக் கண்டறியவும், மீதமுள்ள தொகையை மீட்டெடுக்கவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.