உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது

கமுதி அருகே மது போதையில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 ஜூலை 2026, 1:03 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மது போதையில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கமுதி அருகேயுள்ள ஒச்சத்தேவன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னையா (52). விவசாயி. இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இவா் தனது மகன் சிவாவுடன் (22) ஒரே வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், சிவா மது போதையில் அடிக்கடி வீட்டுக்கு வந்து தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல, மது போதையில் வீட்டுக்கு வந்த சிவா, பொன்னையாவிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை அரிவாளால் வெட்டினாா்.

இதில் பலத்த காயமடைந்த பொன்னையா ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து கோவிலாங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவாவை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.