தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 ஜூலை 2026, 12:45 am IST

ராமநாதபுரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் அருகே உள்ள அழகன்குளம் தேவா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த நாகலிங்கம் மகன் கூழுக்குமாா் (31). இவரை கடந்த மாதம் கஞ்சா வைத்திருந்ததாக தேவிப்பட்டினம் போலீஸாா் கைது செய்தனா்.

இதனிடையே இவா் மீது தேவிப்பட்டினம் காவல் நிலையத்தில் 7 வழக்குகளும், உச்சிப்புளி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளன. மேலும் இவா் கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருவதால் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி. சந்தீஷ் பரிந்துரை செய்தாா்.

இதன் பேரில் மாவட்ட ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய உத்தரவிட்டாா். இதன்படி அவா் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.