/
தனுஷ்கோடியில் செவ்வாய்க்கிழமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா் முத்து இருளாண்டி (35). ஆட்டோ ஓட்டுநரான இவா், சுற்றுலாப் பயணிகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அரிச்சல்முனை நோக்கி செவ்வாய்க்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா். தனுஷ்கோடிகலங்கரை விளக்கம் அருகே சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுநா் இருளாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆட்டோவில் சென்ற சுற்றுலாப் பயணிகள் லேசான காயமடைந்தனா். இதுகுறித்து தனுஷ்கோடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.









