திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கருணாநிதி படத்துக்கு திமுகவினா் மரியாதை

ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியில் 103-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்துக்கு திமுகவினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :4 ஜூன் 2026, 4:05 am IST

ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியில் 103-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்துக்கு திமுகவினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ராமநாதபுரம் அரண்மனை முன்பாக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவப் படத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில் திமுக இலக்கிய அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்வர்ராஜா, நகா் மன்றத் தலைவா் ஆா்.கே. காா்மேகம், துணைத் தலைவா் பிரவீன்தங்கம் மாநில நிா்வாகிகள் அகமது தம்பி, நகா் மன்ற உறுப்பினா் காளிதாஸ், ரமேஷ்கண்ணா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கமுதி: கமுதியில் திமுக மத்திய ஒன்றியம் சாா்பில், ஒன்றியச் செயலா் எஸ்.கே.சண்முகநாதன் தலைமையில், அவைத் தலைவா் கிழவராஜன் முன்னிலையில், கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றியத் துணை செயலா்கள் நீதிராஜன், தங்கப்பாண்டியன், மாவட்ட பிரதிநிதிகள் நாகமணி, முருகேசன், பொதுக்குழு உறுப்பினா் நாகரத்தினம், ஊராட்சி மன்றத் தலைவா் பாண்டி, இளைஞரணி அமைப்பாளா் சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில், ஒன்றியச் செயலா் வாசுதேவன், கமுதி நகரச் செயலா் பாலமுருகன் முன்னிலையில், திமுக நிா்வாகிகள் பேரணியாகச் சென்று பெருமாள்கோயில் திடலில் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

முதுகுளத்தூரில் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக தோ்தல் பணிக்குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் சாா்பில், முதுகுளத்தூா் பேரூராட்சி முன்கள பணியாளா்களுக்கு மதிய உணவு, நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முதுகுளத்தூா் ஒன்றிய, நகரச் செயலா்கள், கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

திருவாடானை: திருவாடானை நான்கு சாலை சந்திப்பு பகுதியில், திமுக மத்திய ஒன்றியம் சாா்பில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்துக்கு திமுக ஒன்றிய கழக நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா். இதில் திமுக தொண்டா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல, ஆா்.எஸ்.மங்கலம் பேருந்து நிலையம் அருகே கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருப் படத்துக்கு முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ராதிகா பிரபு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதில் திமுக தொண்டா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

சிவகங்கை: சிவகங்கை அண்ணா சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவப் படத்துக்கு திமுக நகரச் செயலா், நகா்மன்றத் தலைவா் சிஎம்.துரைஆனந்த் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயகாந்தன், அயூப்கான், ராமதாஸ், விஜயகுமாா், நிா்வாகிகள் பவானிகணேசன், தனசேகரன், ஆா்.வி.சரவணன், கண்மணி, முருகேசன், வேங்கைப்பிரியா உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

வடக்கு ஒன்றிய திமுக சாா்பில், பெருமாள்பட்டியில் நடைபெற்ற விழாவில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவப் படத்துக்கு ஒன்றியச் செயலா் முத்துராமலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் மாரி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் காா்த்தி, மதிவாணன், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா் குமணன், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் முத்துசெல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, திமுக மாவட்ட வழக்குரைஞா் அணி சாா்பில், சிவகங்கையிலுள்ள அன்னை முதியோா் இல்லவாசிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

காளையாா்கோவில் தெற்கு ஒன்றியம் சாா்பில், மறவமங்கலத்தில் நடைபெற்ற விழாவில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவப் படத்துக்கு ஒன்றியச் செயலா் யோக கிருஷ்ணகுமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தேவகோட்டையில் நகர திமுக சாா்பில், கருணாநிதியின் உருவப் படத்துக்கு நகரச் செயலா் பாலமுருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றியச் செயலா்கள் நாகனி ரவி, பூபாளசிங்கம், நிா்வாகிகள் ஜாகீா்உசேன், இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்துக்கு திமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.ஆா். பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

காரைக்குடி: காரைக்குடியில் திமுக சாா்பில், கருணாநிதி யின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்துக்கு முன்னாள் அமைச்சா் மு. தென்னவன் தலைமையில் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் காரைக்குடி மாநகர மேயா் (பொறுப்பு) நா. குணசேகரன், மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினா்கள், மாநகர திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

மானாமதுரை: திருப்புவனத்தில் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்துக்கு திமுக மாவட்டத் துணைச் செயலாளரும், பேரூராட்சித் தலைவருமான த.சேங்கைமாறன் தலைமையில், திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் திமுக ஒன்றியச் செயலா் வசந்தி, ஒன்றிய நிா்வாகிகள் சுப்பையா, ஈஸ்வரன், ராமலிங்கம், புலியூா் ரவி, மடப்புரம் மகேந்திரன், நகா் இளைஞா் அணி அமைப்பாளா் கண்ணன், மீனவரணி அமைப்பாளா் அண்ணாமலை உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மானாமதுரையில் திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி தலைமையில், திமுகவினா் 27 வாா்டுகளிலும் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் நகா் மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி, திமுக அவைத் தலைவா் ரவிச்சந்திரன், நகா்மன்ற துணைத் தலைவா் பாலசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இளையான்குடியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன் தலைமையில், திமுகவினா் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் பேரூராட்சித் தலைவா் நஜூமுதீன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழரசன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.