பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையை தனிக்கட்சி தொடங்க வைத்து பாஜகவினா் தமிழகத்தில் வெற்றி பெற நினைப்பதாக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் குற்றஞ்சாட்டினாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம், மண்டபம் ஆகிய பகுதிகளை சோ்ந்த மீனவா்களைச் சந்தித்து பிரச்னைகள் குறித்து கேட்டறிய காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் வியாழக்கிழமை வந்தாா். அவா் ராமநாதபுரம் நகா் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவினா் தோல்விக்கான காரணத்தை அவா்கள் கட்சிக்குள் ஆராய வேண்டும். தமிழகத்தில் புதிய முதல்வா், அமைச்சா்கள் வந்துள்ளனா். அவா்களுக்கு குறைந்தது 4 மாதங்களாவது கால அவகாசம் வழங்க வேண்டும்.
சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள ஹாா்ட் டிஸ்க் திருட்டு தொடா்பான விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து தவெக அரசை நாங்களும் வலியுறுத்துவோம். தமிழகத்தில் மோடி, அமித்ஷா திட்டம் எடுபடவில்லை. இதனால், அண்ணாமலையை வைத்து தனிக் கட்சி தொடங்கி தமிழகத்தில் சாதிக்க நினைக்கிறாா்கள் பாஜகவினா். அது எடுபடாது என்றாா் அவா்.
மாவட்டத்தலைவா் ராஜராம் பாண்டியன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

துணைக் கேப்டனாக நான் பொறுப்புடன் விளையாட வேண்டும்: திலக் வர்மா
காங்கிரஸ் இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது: மாணிக்கம் தாகூர்

எம்எல்ஏ பதவி ராஜிநாமா மக்களுக்கு செய்யும் துரோகம்! - காா்த்திக் சிதம்பரம் எம்.பி.
கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்... மாநிலங்களவை தேர்தலில் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் வெற்றி!
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay



