தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

துணைக் கேப்டனாக நான் பொறுப்புடன் விளையாட வேண்டும்: திலக் வர்மா

ஆடுகளத்தின் தன்மை மற்றும் ஆட்டத்தின் சூழலுக்கேற்ப துணைக் கேப்டனாக தான் பொறுப்புடன் விளையாட வேண்டும் என திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

News image

திலக் வர்மா - படம் | பிசிசிஐ

Updated On :21 ஜூலை 2026, 8:28 pm IST

ஆடுகளத்தின் தன்மை மற்றும் ஆட்டத்தின் சூழலுக்கேற்ப துணைக் கேப்டனாக தான் பொறுப்புடன் விளையாட வேண்டும் என திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை மறுநாள் (ஜூலை 23) ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப அணியின் துணைக் கேப்டனாக தான் பொறுப்புடன் விளையாட வேண்டும் என திலக் வர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வெளிநாடுகளில் விளையாடும் தொடர்களில் வீரர்கள் வெவ்வேறு இடங்களில் களமிறங்கி விளையாட வேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக, ஆடுகளத்தின் தன்மையை புரிந்துகொண்டு அதற்கேற்ப விளையாடுவது எளிது கிடையாது. அதே நேரத்தில், அணிக்கு தேவையான விஷயங்களை சரியாக செய்ய வேண்டும் என்பதை எப்போதும் கூறுவேன்.

அணிக்காக மெதுவாக விளையாட வேண்டும் என்றால், அதற்கேற்ப விளையாடுவேன். அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயம் இருந்தால், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். அயர்லாந்து, இங்கிலாந்து ஆடுகளங்களில் பவர்பிளேவில் 4 அல்லது 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. அணியின் துணைக் கேப்டனாக சில பொறுப்புகளை நான் எடுத்துக் கொள்ள வேண்டும். அணி நிர்வாகம் எனக்கு சில பொறுப்புகளை கொடுத்துள்ளது. அதற்கேற்ப நான் பொறுப்புடன் விளையாட வேண்டும் என்றார்.

டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு டி20 தொடர்களை இழந்துள்ளது. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 0-2 என்ற கணக்கிலும், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 0-4 என்ற கணக்கிலும் இந்திய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Tilak Varma has stated that, as the vice-captain, he must play responsibly, adapting to the nature of the pitch and the match situation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.