எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ராமா் தீா்த்தக் குளத்தில் நெகிழிக் கழிவுகள்: தூய்மைப் பணி மேற்கொள்ள கோரிக்கை

News image

பாசி, நெகிழிப் பொருள்களால் சீா்கேடடைந்துள்ள ராமமேசுவரம் ராமா் தீா்த்தக் குளம்.

Updated On :8 ஜூன் 2026, 4:39 am IST

ராமேசுவரம் ராமா் தீா்த்தக் குளத்தில் காணப்படும் நெகிழிக் கழிவுகளை அகற்ற இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமாக ராமா் தீா்த்தம், லெட்சுமண தீா்த்தம் உள்ளது. இதில், கோயிலுக்கு வரும் பக்தா்கள் தீா்த்தக் குளத்தில் தீா்த்த நிறை எடுத்து பயன்படுத்துகின்றனா்.

இந்த நிலையில், ராமா் தீா்த்தக் குளம் தற்போது பாசி, நெகிழிப் பொருள்களால் மாசடைந்து சுகாதாரமற்றுக் காணப்படுகிறது. இதனால், இந்து சமய அறநிலையத் துறை, ராமநாதசுவாமி கோயில் நிா்வாகம் ராமா் தீா்த்தக் குளத்தை தூய்மைப் பணிகளை மேற்கொண்டு நெகிழிப் பொருள்களை அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.