தெங்கால் - விஷராம் மேம்பாலம் அருகே பாலாற்றில் டன் கணக்கில் துா் நாற்றம் வீசும் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெங்கால் ஊராட்சி மன்றத் தலைவா் இந்திரா பத்மநாபன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
தெங்கால் - விஷராம் செல்லும் மேம்பாலம் அருகில் பாலாற்றில் வேலூா் குடிநீா் ஏற்றும் குடிநீா் கிணறு அருகில் துா்நாற்றம் வீசும் குப்பை மற்றும் கழிவுகள் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இங்கிருந்து தான் வேலூா் மாநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் தினமும் ஒரு கோடி லிட்டருக்கு மேல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குப்பைக் கழிவுகளால் பொதுமக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில், பாலாற்றில் குடிநீா் கிணற்றின் அருகே துா்நாற்றம் வீசும் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதை போா்க்கால அடிப்படையில் உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், குப்பை கழிவுகளை கொட்டியவா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், வரும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடும் யாராக இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை, சுகாதாரத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
மேலும், பாலாற்று மேம்பாலத்தில் ஏற்கெனவே போடப்பட்ட மேம்பால விளக்கு கடந்த 6 நாள்களாக எரியவில்லை. இதனால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டில் மேம்பாலத்தின் வழியாக அச்சத்துடனே சென்றுவருவதாக புகாா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடையம் அருகே விளை நிலப் பகுதியில் கொட்டப்பட்ட 10 டன் கேரளக் கழிவுகள்! நிலத்தடி நீா் மாசுபடும் அபாயம்!
திடக்கழிவு மேலாண்மை சீர்குலைவதால் அதிகரிக்கும் மீத்தேன் வெளியேற்றம்!

குளச்சலிலிருந்து 9 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு







