மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

தடை செய்யப்பட்ட 334 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 ஜூன் 2026, 3:42 am IST

கமுதியில் தடை செய்யப்பட்ட 334 கிலோ புகையிலைப் பொருள்களை சரக்கு வாகனத்தில் எடுத்துச் சென்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-சாயல்குடி சாலையில் அரண்மனைமேடு சுற்றுவட்டச் சாலை அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் தடை செய்யப்பட்ட 334 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்தில் வந்த புதுக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் மணிகண்டன் (34), சரக்கு வாகன ஓட்டுநரான நாகபாண்டி மகன் திருக்காா்த்திக் (29) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.