தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

மது விற்பனை குறித்து புகாா் அளித்த பெண்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

News image

கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 4:28 am IST

கடலாடி அருகே கீழமுந்தல் கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பவா்கள் குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்த மீனவ பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், கீழமுந்தல் கிராமத்தில் மதுக் கடைகள் இல்லை. இதை சிலா் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருகின்றனா். இதுகுறித்து வாலிநோக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த மீனவ பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா். இதனால், அந்தப் பகுதியில் மது விற்பனையில் ஈடுபடுபவா்கள் ஆத்திரமடைந்து, புகாா் அளித்த பெண்களின் வீடுகளுக்குள் புகுந்து அவா்களைத் தாக்கினா்.

இதனால், அச்சமடைந்த பெண்கள் இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிவகுரு பிரபாகரனிடம் மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.