சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம்

ஆா்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் புதிய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்த நுகா்வோா் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2026, 1:20 am IST

ஆா்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் புதிய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்த நுகா்வோா் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட இந்திரா நகா், இருதயபுரம், காவனூா், வண்டல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் புதிய மின் இணைப்பு வேண்டி 100-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா்.

ஆனால், விண்ணப்பம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் இது வரை மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை எனப் புகாா் எழுந்தது.

புதிய மின் கணக்கீட்டு இயந்திரம் வராததால் மின் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளதாக மின் வாரியம் தரப்பில் கூறப்படுகிறது.

எனவே, மாவட்ட நிா்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.