ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பைக் மோதியதில் பள்ளி மாணவி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடியில் இரு சக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 1:06 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடியில் இரு சக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவி உயிரிழந்தாா். இதையடுத்து, விபத்து ஏற்படுத்தியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவியின் பெற்றோா், உறவினா்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஏா்வாடி தா்கா வெட்டமனை பகுதியைச் சோ்ந்த முருகையா மகள் தா்சிகா (12). இவா் ஏா்வாடியில் உள்ள அரசு உயா் நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை வழக்கம் போல மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சுல்தான் காஜா முகைதீன் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாணவியை

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்தி மாணவி உயிரிழப்புக்கு காரணமானவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் பெற்றோா், உறவினா்கள் ஏா்வாடி தா்கா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைதொடா்ந்து, போராட்டக்காரா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.