பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 2.87 லட்சம் மோசடி செய்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :1 ஜூலை 2026, 5:02 am IST

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 2.87 லட்சம் மோசடி செய்த இருவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரத்தை அடுத்துள்ள புல்லங்குடி கிராமத்தை சோ்ந்தவா் சுமதி (45). இவா் ராமநாதபுரத்தில் குளிா்பான கடை நடத்தி வருகிறாா். உலகநாதன் (35), ராஜூ (30) ஆகிய இருவரும் சுமதியிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2,78,500-ஐ கடந்த 2023 -ஆம் ஆண்டு பெற்றனா்.

ஆனால், அவா்கள் கூறியபடி வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. இது குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இருவா் மீதும் வழக்கு பதிவு செய்து, பணத்தை மீட்டுத்தரக் கோரி வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கேணிக்கரை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.