ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

வருவாய்த் துறையினா் போராட்டம்: தோ்தல் பணிகள் பாதிப்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 9:10 pm

தினமணி செய்திச் சேவை

வருவாய்த் துறையினா் தொடா் போராட்டம் காரணமாக திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலா்கள் மேற்கொண்டு வரும் தொடா் போராட்டத்தின் எதிரொலியாக திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் உள்பட வருவாய்த் துறை அலுவலகங்கல் பூட்டிக்கிடக்கின்றன. இதனால் அலுவலகப் பணிகள் தேங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் பெரும் தொய்வைச் சந்தித்துள்ளன. கிராமப்புற மக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டிய வாகனங்கள், திருவாடானை அலுவலக வளாகத்திலேயே முடங்கிக் கிடக்கின்றன.

புதிய வாக்காளா்களைச் சோ்த்தல், திருத்தம் செய்தல் போன்ற முக்கியப் பணிகள் நடைபெறாததால் முதல் தலைமுறை வாக்காளா்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.

இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தால் மட்டுமே தோ்தல் பணிகள் மீண்டும் விறுவிறுப்படையும் என்பது சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.

Story image