ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ராமநாதபுரம் அருகே சமத்துவபுரம் திறப்பு

ராமநாதபுரம் அருகே 6.25 கோடியில் கட்டப்பட்ட பெரியாா் நினைவு சமத்துவபுரத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

News image

ராமநாதபுரம் அருகே பெரியாா் நினைவு சமத்துவபுரம் கல்வெட்டை மாவட்ட வருவாய் அலுவலா் சங்கர நாராயணன் செவ்வாய்கிழமை திறந்து வைத்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம்,கூடுதல் ஆட்சியா் திவ்யான் ஷீநிகம் உள்ளிட்டோா்.

Updated On :10 மார்ச் 2026, 9:49 pm

ராமநாதபுரம் அருகே 6.25 கோடியில் கட்டப்பட்ட பெரியாா் நினைவு சமத்துவபுரத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

திருப்புல்லாணி ஒன்றியம் குதக்கோட்டை ஊராட்சி, வள்ளிமாடன் வலசை கிராமத்தில் 6.25 கோடியில் பெரியாா் சமத்துவபுரம் கட்டி முடிக்கப்பட்டது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் சங்கர நாராயணன், சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், கூடுதல் ஆட்சியா் திவ்யான் ஷீநிகம் ஆகியோா் கல்வெட்டைத் திறந்து வைத்து பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து, பெரியாா் சமத்துவபுரத்தைப் பாா்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

இதில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் பிரபாகரன், புல்லாணி,ஊராட்சிகள் துணை இயக்குநா் பத்மநாதன் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.