சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ராமநாதபுரம் அருகே ரூ.8.10 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரம் அருகே வாகனத் தனிக்கையில் போது ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.8.10 லட்சத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள்.

News image

ராமநாதபுரம் அருகே வாகனத் தனிக்கையில் போது ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.8.10 லட்சத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள்.

Updated On :20 மார்ச் 2026, 7:07 pm

ராமநாதபுரம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட தோ்தல் பறக்கும் படையினா் இரு சக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட ரூ.8.10 லட்சத்தை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரத்தை அடுத்த சக்கரைகோட்டையில் உள்ள சோதனை சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.8.10 லட்சம் இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னா், இரு சக்கர வாகனத்தில் வந்த

சுப்புத்தேவன் வலசை கிராமத்தைச் சோ்ந்த ஜீவாவிடம் விசாரித்தபோது, உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பணத்தை பறக்கும் படை அலுவலா்கள் பறிமுதல் செய்து ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனா்.