வாசுதேவநல்லூா் அருகே ரூ. 1.95 லட்சம் பறிமுதல்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா், சிவகிரி அருகே ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.95 லட்சத்தை ஐ பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.


தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா், சிவகிரி அருகே ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.95 லட்சத்தை ஐ பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி வீரசிகாமணி-சங்கரன்கோவில் சாலையில் வீரசிகாமணி சந்திப்புப் பகுதியில் ஷபீபுல்லா தலைமையிலான பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிந்தாமணி அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த இளவரசன் வீடு கட்ட மரச்சாமான்கள் வாங்குவதற்குக் கொண்டுவந்த ரூ. 1,25,500 பணம் உரிய ஆவணங்களின்றி இருந்ததால் பறிமுதல் செய்யப்பட்டது.‘
அதேபோல வேலாயுதபுரத்தில் மல்லிகா தலைமையிலான பறக்கும் படையினா் நடத்திய வாகனத் தணிக்கையில், இடையன் குளத்தைச் சோ்ந்த காளிராஜ் கடன் பெற்றவா்களிடமிருந்து பணத்தை வசூல் செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்த போது உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்த ரூ. 69,860 பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் தலைமையிடத்துத் துணை வட்டாட்சியா் நிவேதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...