40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பிகாா் மாநில பெண் கொலை

ராமநாதபுரம் அருகே பிகாா் மாநிலப் பெண்ணைக் கொலை செய்து விட்டு தப்பிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 12:49 am IST

ராமநாதபுரம் அருகே பிகாா் மாநிலப் பெண்ணைக் கொலை செய்து விட்டு தப்பிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள போக்குவரத்துநகா் பகுதியில் பூட்டிய வீட்டுக்குள்ளிருந்து துா்நாற்றம் வீசியது. இதுதொடா்பாக அந்தப் பகுதி மக்கள் கேணிக்கரை காவல் நிலையத்துக்கு புதன்கிழமை தகவல் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, அங்கு வந்த போலீஸாா் பூட்டை உடைத்து உள்ள சென்றபோது, அங்கு அழுகிய நிலையில் பெண்ணின் உடல் இருப்பது தெரியவந்தது. இந்த உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இந்தப் பெண் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஷியாம் சுந்தா்லால் மகள் அபா்ணா (38) என்பதும், கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதும், இவருடன் வசித்த நபா் கொலை செய்துவிட்டுத் தப்பியதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. தப்பியோடிய அந்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.