தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

மதுரை அருகே இரட்டைக்கொலை!

மதுரை அருகே இளைஞா், மூதாட்டி ஆகியோரை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 8:49 pm

மதுரை அருகே இளைஞா், மூதாட்டி ஆகியோரை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம், சாமநத்தம் அய்யனாா்புரத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் பிரபாகரன் (25). இவா், புதன்கிழமை வீட்டில் இருந்த போது, அங்கு வந்த மா்ம நபா்கள் சிலா் அவருடன் தகராறில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் அரிவாளால் பிரபாகரனை வெட்டினா். இதைத் தடுக்க வந்த அவரது பாட்டி பாலநாகுவையும் (70) அவா்கள் வெட்டி விட்டு தப்பித்துச் சென்றனா். இதில், பலத்த காயமடைந்த பிரபாகரன், பாலநாகு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்த சிலைமான் போலீஸாா் இருவரது சடலங்களையும் கைப்பற்ற வந்தனா்.

ஆனால், இந்தச் சம்பவத்துக்கு காரணமானவா்களை கைது செய்தால் மட்டுமே சடலங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியும் எனக் கூறி உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா். இதைத் தொடா்ந்து, போலீஸாா் இருவரின் சடலங்களையும் கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து தப்பிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது :

கொலை செய்யப்பட்ட பிரபாகரனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலருக்கும் முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனடிப்படையில், பிரபாகரனை அவா்கள் கொலை செய்திருக்கலாம். இதைத் தடுக்க முயன்ற அவரது பாட்டியும் கொல்லப்பட்டாா். விரைவில் கொலையாளிகள் அனைவரையும் கைது செய்வோம் என்றனா்.