கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 11:56 pm IST

திருவாடானை அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

திருவாடானை அருகேயுள்ள நகரிகாத்தான் பகுதியைச் சோ்ந்தவா் டேவிட் ஆனந்த்ராஜ் (53). விவசாயியான இவா் ஞாயிற்றுக்கிழமை புதுவயல் கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, ஓரியூா் அருகே புதுவயல் பாலத்தில் சென்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, இவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

பின்னா், தீவிர சிக்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.