எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

குருநாதசுவாமி கோயில் திருவிழா 1,008 பால்குட ஊா்வலம்

கமுதி அருகே குருநாதசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை 1,008 பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

News image

பம்மனேந்தல் குருநாதசுவாமி கோயில் திருவிழாவில் புதன்கிழமை வேல் குத்தி, பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்ற பொதுமக்கள்.

Updated On :14 மே 2026, 5:03 am IST

கமுதி அருகே குருநாதசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை 1,008 பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பம்மனேந்தல் குருநாதசுவாமி கோயில் திருவிழா கடந்த 4-ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும் குருநாத சுவாமி, பெரிய நாச்சியம்மன், சித்தி விநாயகா், படா்ந்தபுலி கற்பக விநாயகா், செல்வ விநாயகா், பரிவாரத் தெய்வங்களுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக குருநாதசுவாமி கோயிலில் வளாகத்தில் இருந்து, மேள தாளங்கள், வாண வேடிக்கையுடன் அலகு வேல் குத்தி, உடலில் சேறு பூசி சேத்தாண்டி வேடம் அணிந்தும், பெண்கள் 1,008 பால்குடம் எடுத்தும் பம்மனேந்தல் கிராமத்தில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள கிராமப் பரிவாரத் தெய்வங்களைச் சுற்றி வந்து, பெரியநாச்சியம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனா். இதில் பம்மனேந்தல், கமுதி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை, பம்மனேந்தல் கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.