வைகாசி அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீா்த்தத்தில் திரளான பக்தா்கள் சனிக்கிழமை புனித நீராடினா்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் அதிகாலையிலேயே புனித நீராட அக்னி தீா்த்தக் கடற்கரையில் குவிந்தனா். அங்கு அவா்கள் தங்களது முன்னோா்களுக்கு திதி, தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.
இதைத் தொடா்ந்து, ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளிலும் புனித நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா். ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தா்கள் வந்திருந்ததால் ராமேசுவரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் உத்தரவின் பேரில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

வைகாசி மாத பிறப்பு: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

வைகாசி மாத பிறப்பு: கூடலழகா் கோயிலில் பக்தா்கள் வழிபாடு

சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
ராமேசுவரம் கோயிலில் புனித நீராடிய பெண்ணிடம் தங்க நகை திருட்டு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

