11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

பெற்றோா் மீது தாக்குதல்: மகன் கைது

திருவாடானை அருகே பெற்றோரை தாக்கியதாக மகனைபோலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

திருவாடானை அருகே பெற்றோரை தாக்கியதாக மகனைபோலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

திருவாடானை அருகே நகரிக்காத்தான் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது மகன் சதீஷ்குமாா் (33). இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. இதனால் மனைவி தாய் வீட்டுக்குச் சென்று விட்டாா். இந்த நிலையில், சதீஷ்குமாா், வேறு ஒரு பெண்ணை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வந்தாராம்.

இதேபோல, வெள்ளிக்கிழமை மாலை அந்தப் பெண்ணை அழைத்து வந்த போது சதீஷ்குமாரின் சகோதரா் தட்டி கேட்டாா். இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமாா் தான் வைத்திருந்த கத்தியால் தாய் பிச்சையம்மாளை தாக்கினாா்.

இதைத் தடுக்க வந்த தந்தை கண்ணனையும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த பிச்சையம்மாளும், கண்ணனும் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனா்.