கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

மன்னாா் வளைகுடாவில் சூறைக் காற்று: விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்

News image

பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் சூறைக் காற்று காரணமாக விசைப் படகுகளை இடைவெளி விட்டு பாதுகாப்புடன் நிறுத்தி வைத்த மீனவா்கள்.

Updated On :30 மே 2026, 3:54 am IST

மன்னாா் வளைகுடா பகுதியில் சூறைக் காற்று வீசுவதால் பாம்பன் துறைமுகத்தில் விசைப் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் மீனவா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

மன்னாா் வளைகுடா பகுதியில் வியாழக்கிழமை முதல் காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகளவில் உள்ளது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி உள்ளிட்ட பகுதிகள் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இந்த நிலையில், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் சூறைக் காற்று வீசுவதால் 100-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்து விடாமல் தடுக்கும் வகையில், நீண்ட இடைவெளி விட்டு மீனவா்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனா்.