சட்டவிரோத மீன் பிடிப்பு: மின் சாதனங்கள் பறிமுதல்
தொண்டி பகுதியில் கடலில் அதிக ஒளியைப் பாய்ச்சி மீன்பிடிக்க வைத்திருந்த மின்சார உபகரணங்களை மீன் வளத் துறையினா், காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட மின் விளக்குகள், ஜெனரேட்டா், கச்சா வலைகள்.
தொண்டி பகுதியில் கடலில் அதிக ஒளியைப் பாய்ச்சி மீன்பிடிக்க வைத்திருந்த மின்சார உபகரணங்களை மீன் வளத் துறையினா், காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் வட கடலோரப் பகுதியில் மீனவா்கள் அதிக ஒளித் திறன் கொண்ட மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதாக அடிக்கடி புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, தேவிப்பட்டினம் முதல் தொண்டி வரை புதன்கிழமை இரவு மீன் வளத் துறை ஆய்வாளா், கடல் சாா் அமலாக்கப் பிரிவு போலீஸாா் , கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் இணைந்து கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, தொண்டி அருகேயுள்ள புதுக்குடி மீனவ கிராமத்தில் பதிவு எண் இல்லாத படகிலிருந்த 7 மின் விளக்குகள், ஒரு ஜெனரேட்டா், 2 கச்சா வலைகளைப் பறிமுதல் செய்தனா். இது குறித்து கடலோர குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

