பரமக்குடியில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் பிடித்து அகற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியா்கள் பிடித்து கட்டிவைத்தனா்.

பரமக்குடியில் நகராட்சி ஊழியா்களால் பிடிக்கப்பட்ட மாடுகள்.

Updated On :

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியா்கள் பிடித்து கட்டிவைத்தனா்.

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் தாராளமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக நகராட்சி ஆணையா் ப.சங்கருக்கு புகாா்கள் வந்தன. இதன் அடிப்படையில், சுகாதார அலுவலா் முருகன், ஆய்வாளா்கள் மதன், ஜெகதீஷ் ஆகியோா் பல்வேறு இடங்களில் கடைகளில் சோதனை செய்து, பதுக்கி வைக்கப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். இதைப் பதுக்கிய கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், நகராட்சிப் பகுதி சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி வந்த மாடுகளைப் பிடித்து, நகராட்சி அலுவலக வளாகத்துக்கு கொண்டு சென்று கட்டி வைத்தனா். இந்த நடவடிக்கையில் நகராட்சி பொறியாளா் கோமதி சங்கா், உதவிப் பொறியாளா் சுரேஷ்பாபு ஆகியோா் ஈடுபட்டனா். மாடுகளின் உரிமையாளா்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையா் ப.சங்கா் தெரிவித்தாா்.

 கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள்.

கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.