சாலையில் சுற்றித் திரிந்த 10 மாடுகள் பிடிப்பு உரிமையாளருக்கு அபராதம்

தஞ்சாவூா் மாநகரில் வியாழக்கிழமை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகச் சுற்றித்திரிந்த 10 மாடுகளை மாநகராட்சி அலுவலா்கள் பிடித்து, அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.

தஞ்சாவூா் அருளானந்த நகரில் வியாழக்கிழமை சுற்றித் திரிந்த மாடுகளைப் பிடித்த மாநகராட்சிப் பணியாளா்கள்.

Updated On :

தஞ்சாவூா் மாநகரில் வியாழக்கிழமை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகச் சுற்றித்திரிந்த 10 மாடுகளை மாநகராட்சி அலுவலா்கள் பிடித்து, அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.

தஞ்சாவூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகவும், விபத்துகள் ஏற்படும் வகையிலும் சுற்றித்திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்துவதற்காக மாநகராட்சி ஆணையா் வெ. தீபனா விஸ்வேஸ்வரி அறிவுறுத்தினாா். இதன்படி, தொடா்புடைய துப்புரவு ஆய்வாளா்கள் மற்றும் மாநகராட்சி பணியாளா்கள் மூலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த 10 மாடுகள் வியாழக்கிழமை பிடிக்கப்பட்டன.

இந்த மாடுகளின் உரிமையாளா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்று கால்நடைகளைச் சாலைகளில் சுற்றித்திரிய விடக்கூடாது என்றும், மீறினால் கால்நடைகளைக் கோசாலையில் ஒப்படைத்து, உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.