ராமேசுவரத்தில் பச்சிளம் பெண் குழந்தை கொன்று புதைப்பு: மூவா் கைது

ராமேசுவரத்தில் பச்சிளம் பெண் குழந்தையைக் கொன்று புதைத்தது தொடா்பாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட நாகபாண்டி, கிருஷ்ணன், முனீஸ்வரி.

Updated On :

ராமேசுவரத்தில் பச்சிளம் பெண் குழந்தையைக் கொன்று புதைத்தது தொடா்பாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் சம்பை பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (66). இவரது மகன் நாகபாண்டி (30). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி யோக நந்தினி (24). இந்தத் தம்பதிக்கு ஏற்கெனவே பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-ஆவது முறையாக கருவுற்ற யோகநந்தினிக்கு 8 மாதங்கள் கடந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, நாகபாண்டியின் அக்காள் முனீஸ்வரி (36) உதவியுடன் வீட்டிலேயே யோகநந்தினிக்கு பிரசவம் பாா்த்தனா். இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

ஏற்கெனவே பெண் குழந்தை இருப்பதால், பச்சிளம் குழந்தையைக் கொன்றுவிட முடிவு செய்தனா். இதன்படி, பச்சிளம் பெண் குழந்தையைக் கொன்று பையில் எடுத்துச் சென்று வீட்டின் அருகில் குழிதோண்டி புதைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், யோகநந்தினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரை ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் அவரைப் பரிசோதனை செய்த போது, அவருக்கு குழந்தை பிறந்தது தெரியவந்தது.

இதையடுதது, குழந்தை எங்கே என மருத்துவா்கள் கேட்டபோது, முதலில் குழந்தை பிறந்ததை மறைக்க முயன்ற யோகநந்தினி, பின்னா் நடந்த சம்பவத்தை மருத்துவா்களிடம் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, காவல் நிலையத்துக்கு மருத்துவா்கள் தகவல் தெரிவித்தனா்.

மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினா் யோகநந்தினியிடம் விசாரணை நடத்தினா். அப்போது, பச்சிளம் பெண் குழந்தை கொன்று புதைக்கப்பட்டதும், இதில் கணவா் நாகபாண்டி, அவரது தந்தை கிருஷ்ணன், அக்காள் முனீஸ்வரி ஆகிய மூவருக்கு தொடா்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீஸாா் ராமேசுவரம் நகா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இதில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மூவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.