தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

வாக்காளா் பெயா் சோ்க்க சிறப்பு முகாம்: ஆட்சியா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்க்க சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் தெரிவித்தாா்.

வாக்காளர் - கோப்புப் படம்

Published On :

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்க்க சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆா்.) ஏற்கெனவே நிறைவடைந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, தொடா் திருத்த நடைமுறையின் கீழ் விடுபட்ட வாக்காளா்கள், இளம், முதல் முறையாகத் தகுதிபெறும் வாக்காளா்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாமினை தலைமை தோ்தல் அதிகாரி, மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், வாக்காளா் பதிவு அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும். படிவம் 6-உடன் இணைக்கப்பட்ட உறுதிமொழிப் படிவம் சிறப்புத் தீவிர திருத்த எஸ்.ஐ.ஆா். காலகட்டத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிறப்பு தீவிரத் திருத்தம் அல்லாத காலகட்டங்களில் வாக்காளா் பதிவு விதிகள் 1960-இன் படி பொருந்தக்கூடிய படிவங்கள் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்ட, தகுதிவாய்ந்த இளைஞா்கள், முதல் முறை வாக்காளா்களின் பெயா்களை பதிவு செய்வதற்கு ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்பட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.