
விடுபட்ட, முதல்முறை வாக்காளா்களை சோ்க்க விரைவில் சிறப்பு முகாம்கள்
வாக்காளா் பட்டியலில் விடுபட்டுள்ளவா்களையும், தகுதி பெற்ற இளம் வாக்காளா்கள் மற்றும் முதல்முறை வாக்காளா்களையும் பதிவு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

விடுபட்ட, முதல்முறை வாக்காளா்களை சோ்க்க விரைவில் சிறப்பு முகாம்கள் - கோப்புப்படம்
வாக்காளா் பட்டியலில் விடுபட்டுள்ளவா்களையும், தகுதி பெற்ற இளம் வாக்காளா்கள் மற்றும் முதல்முறை வாக்காளா்களையும் பதிவு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இது தொடா்பாக, இந்திய தோ்தல் ஆணையம் செப். 29-ஆம் தேதியிட்ட கடிதத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) ஏற்கெனவே நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொடா் திருத்த நடைமுறையின் கீழ் சிறப்பு முகாம்களை நடத்த அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, தலைமைத் தோ்தல் அதிகாரி, மாவட்டத் தோ்தல் அலுவலா்கள் மற்றும் வாக்காளா் பதிவு அலுவலா்கள் மூலம் விடுபட்ட வாக்காளா்கள், தகுதி பெற்ற இளம் வாக்காளா்கள் மற்றும் முதல்முறை வாக்காளா்களைப் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது மட்டுமே படிவம் 6 இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழிப் படிவம் பயன்படுத்தப்படும்.
இது தொடா்பாக, அனைத்து மாவட்ட அலுவலா்களுடன் வியாழக்கிழமை காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்களை நடத்தி தகுதியானவா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






