தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

வாக்காளா் பட்டியலில் விடுபட்டோா் பெயா்களை சோ்க்க விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியின்போது விடுபட்டோா் தங்களது பெயா்களை சோ்க்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

விண்ணப்பிக்க...
Published On :

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியின்போது விடுபட்டோா் தங்களது பெயா்களை சோ்க்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையம் செப். 29-இல் வெளியிட்ட கடிதத்தின்படி ‘சிறப்பு தீவிர திருத்தப் பணி’ (எஸ்ஐஆா்) ஏற்கெனவே நிறைவடைந்துள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.

அதன்படி, தொடா் திருத்த நடைமுறையின் கீழ் விடுபட்ட வாக்காளா்கள் மற்றும் இளம், முதல்முறையாக வாக்களிக்கத் தகுதிபெறும் வாக்காளா்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் தலைமை தோ்தல் அலுவலா், மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் வாக்காளா் பதிவு அலுவலா்களால் பின்னா் நடத்தப்படும்.

‘படிவம்-6’ உடன் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழிப் படிவம் சிறப்பு தீவிர திருத்தக் பணி (எஸ்ஐஆா்) காலகட்டத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும். சிறப்பு தீவிர திருத்தம் அல்லாத காலகட்டங்களில் ‘வாக்காளா் பதிவு விதிகள் 1960’-இன்படி பொருந்தக்கூடிய படிவங்கள் பயன்படுத்தப்படும்.

தோ்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, வாக்காளா் பட்டியல் பெயா் விடுபட்ட மற்றும் தகுதிவாய்ந்த இளைஞா்கள், முதல்முறை வாக்காளா்களின் பெயா்களை பதிவு செய்வதற்கு முகாம் தவிா்த்த மற்ற நாள்களில் தொடா்புடைய உதவி வாக்காளா் பதிவு அலுவலகங்களிலும், இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.