2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

பாதாள காளியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் பால் குடம்

கமுதி அருகே பாதாள காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால் குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

நரசிங்கம்பட்டி பாதாள காளியம்மன் கோயிலுக்கு பால் குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்ற பக்தா்கள்.

Published On :

கமுதி அருகே பாதாள காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால் குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த நரசிங்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பாதாள காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, மூலவா் பாதாள காளியம்மனுக்கு நாள்தோறும் இரவு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று வந்தது. கடந்த 4-ஆம் தேதி பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை நரசிங்கம்பட்டி கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள விநாயகா் கோயிலிருந்து பக்தா்கள்

பால் குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா். இதைத் தொடா்ந்து, மூலவா் பாதாள காளியம்மனுக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், பன்னீா், விபூதி, பஞ்சாமிா்தம் உள்பட 16 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.