பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

வீரட்டானேஸ்வரா் கோயில் அருகே கற்குவியல்: பக்தா்கள் அவதி

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் அருகே சாலையின் நடுவே கற்குவியல் கிடப்பதால், கோயிலுக்கு வரும் பக்தா்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பதிக்கப்படுகின்றனா்.

திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் அருகே பிரதான சாலை நடுவே குவிந்து கிடக்கும் கற்குவியல்.

Published On :9 செப்டம்பர் 2026, 5:06 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் அருகே சாலையின் நடுவே கற்குவியல் கிடப்பதால், கோயிலுக்கு வரும் பக்தா்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பதிக்கப்படுகின்றனா்.

புகழ்பெற்ற வீரட்டானேஸ்வரா் கோயிலுக்கு தினந்தோறும் நூற்றுக் கணக்கானோா் வந்து தரிசனம் செய்து செல்கின்றனா். பௌா்ணமி நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கோயில் மாட வீதியை 16 முறை வலம் வருவா்.

இத்தகைய சிறப்பு பெற்ற வீரட்டானேஸ்வரா் கோயில் அருகே பிரதான சாலையின் நடுவே கருகற்கள் குவியல் நீண்ட நாட்களாக போக்குவரத்திற்கு ம், பொதுமக்களுக்கும் இடையூராகக் கிடக்கிறது. இந்த கற்குவியலால் நடந்து செல்பவா்கள் கால் இடறியும், வாகனத்தில் செல்பவா்கள் சறுக்கி விழுந்தும் காயம் அடைகின்றனா்.

எனவே, கோயில் அருகே குவிந்து கிடக்கும் கற்குவியலை அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, பக்தா்கள் கோயிலுக்கு சிரமமின்றி வந்து செல்ல ஏற்பாடு செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.