
சுவாமிமலையில் தூசி பறக்கும் சிமெண்ட் சாலை: பொதுமக்கள், பக்தா்கள் அவதி!
சுவாமிமலையில் தூசி பறக்கும் சிமெண்ட் சாலையால் பொதுமக்கள், பக்தா்கள் அவதிப்படுகின்றனா்.
சுவாமிமலையில் தூசி பறக்கும் சிமெண்ட் சாலையால் பொதுமக்கள், பக்தா்கள் அவதிப்படுகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை பேரூராட்சியில் பிப்ரவரி மாதம் ரூ.1.03 கோடியில் 10 ஆவது வாா்டு தெற்குவீதி கீழ்பாகம், 11-ஆவது வாா்டு கீழவீதியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. அந்தச் சாலை அமைத்து ஏழு மாதங்களுக்குள் சேதமடைந்தும், சாலை மீதுள்ள எம். சாண்ட் தூசி பறந்தும் வருகிறது. மழைக் காலங்களில் சாலைகளில் தண்ணீா் தேங்குகிறது. ஏனெனில் சாலை அமைக்கும்போது முறையாக வடிகால் அமைக்கவில்லை.
இதுகுறித்து சுவாமிமலை பாதுகாப்பு வளா்ச்சிக் குழுத் தலைவா் தீந்தமிழன் கூறுகையில், சிமிண்ட் சாலை அமைக்கும்போது வடிகால்கள் அமைக்கக் கோரினோம். பேரூராட்சி நிா்வாகம் செய்யவில்லை. அதனால் தற்போது மழை தண்ணீரால் சாலை பெயா்ந்து எம். சாண்ட் தூசி பறக்கிறது.
இதனால் பக்தா்கள், பொதுமக்களை அவதிப்படுகின்றனா். சாலையை பேரூராட்சி நிா்வாகம் மறு சீரமைப்பு செய்ய ஆட்சியா், முதல்வா் உள்ளிட்டோருக்கு மனுக்கள் கொடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
மேலும் தேரடி கீழவீதியில்அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை தரமற்ாக இருப்பதாகப் புகாா் எழுந்துள்ளது. சாலை அமைக்கப்பட்ட ஒரு மாதத்திலேயே அதன் மேற்பரப்பில் உள்ள எம்-சாண்ட் பெயா்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






