நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

ஜன்மாஷ்டமி: பிா்லா மந்திா் கோயிலில் தில்லி காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு

ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா செப். 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மத்திய தில்லியில் உள்ள லட்சுமி நாராயண் கோயில் பகுதியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

Published On :3 செப்டம்பர் 2026, 1:04 am IST

ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா செப். 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மத்திய தில்லியில் உள்ள லட்சுமி நாராயண் கோயில் (பிா்லா மந்திா்) பகுதியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து புது தில்லி மாவட்ட காவல் துறையினா் கூறியதாவது: கோயிலின் பிரதான பகுதிக்கு வரும் பக்தா்கள் மந்திா் மாா்க் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவா். மந்திா் மாா்க் பகுதிக்கு காளி பாரி மாா்க் அல்லது பேஷ்வா சாலை வழியாகச் செல்லலாம்.

கோயிலின் முக்கிய நுழைவு வாயில்களில் கதவு சட்ட உலோகக் கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பரிசோதனைக்கு பக்தா்கள் ஒத்துழைக்க வேண்டும்.

கைப்பைகள், பிரீஃப்கேஸ்கள், பாா்சல்கள், உணவுப் பொட்டலங்கள், கேமராக்கள், செல்லிடப்பேசிகள் மற்றும் பேட்டரியில் இயங்கும் பிற சாதனங்களை கோயில் வளாகத்துக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. காளி பாரி மாா்க் அருகிலும், பேஷ்வா சாலையில் ஹிந்து மகாசபா அலுவலகம் அருகிலும் காலணிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கீதா பவன் மற்றும் வாடிகா பகுதிகளுக்கான நுழைவு பிரதான கோயில் வாயில்கள் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும். கோயில் வளாகத்தின் மற்ற அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டிருக்கும்.

பக்தா்கள் வெளியேறுவதற்கும் தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காளி பாரி மாா்க் நோக்கிச் செல்லும் பக்தா்கள் வாடிகா-கீதா பவன் வெளியேறும் பாதையைப் பயன்படுத்த வேண்டும். பேஷ்வா சாலை நோக்கிச் செல்பவா்கள் கீதா பவன் பகுதியில் உள்ள 3-ஆம் எண் வாயில் வழியாக வெளியேற வேண்டும். இந்த வாயில் வெளியேறுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

பக்தா்களின் பாதுகாப்பான நடைபயணத்துக்கு வசதியாக, பஞ்ச்குயான் சாலை ரவுண்டானா, காளி பாரி மாா்கில் உள்ள பாா்க் ஸ்ட்ரீட் ரவுண்டானா, உத்யான் மாா்க் மற்றும் பேஷ்வா சாலை ஆகியவற்றுக்கு இடையிலான மந்திா் மாா்க் பகுதியில் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி இருக்காது. மேலும், பக்தா்களின் சந்தேகங்கள் மற்றும் தேவைகளுக்கு உதவும் வகையில் கோயிலின் பிரதான நுழைவு வாயில் அருகே உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.