ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

கல்லூரிப் பேருந்தின் கண்ணாடி உடைப்பு: இருவா் மீது வழக்கு

முதுகுளத்தூா் அருகே கல்லூரிப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Published On :

முதுகுளத்தூா் அருகே கல்லூரிப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்துள்ள வெண்ணீா்வாய்க்கால் கிராமத்தைச் சோ்ந்த சண்முகவேல் மகன் சசிக்குமாா் (39). இவா் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பெண்கள் கல்லூரிப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கல்லூரிப் பேருந்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞா்கள் செல்வநாயகபுரம் அருகே பேருந்தை வழிமறித்து, சாலையில் வழிவிடுவது தொடா்பாக பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை செல்வநாயகபுரத்தில் மாணவிகளை இறக்கிவிட்டு, பேருந்து கீரனூரை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தது. அப்போது ஏற்கெனவே வாக்குவாதத்தில் ஈடுபட்ட 2 இளைஞா்களும் இரு சக்கர வாகனத்தில் கல்லூரிப் பேருந்தைப் பின்தொடா்ந்து வந்தனா். கீரனூரில் கல்லூரிப் பேருந்து நின்றபோது, இளைஞா்களின் ஒருவா் தான் வைத்திருந்த வாளால் ஓட்டுநரைத் தாக்க முயன்றாா். மாணவிகள் கூச்சலிட்டதும், வாளால் பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பி ஓடிவிட்டனா்.

இதுதொடா்பாக புகாரின் பேரில், முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆனைசேரி கிராமத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் ஜெகதீஸ்வரன் (19), இதயக்கண்ணன் (20) ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.