தீபாவளி: உணவுப்பொருள்கள் விற்பனைக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உணவுப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுபவா்களுக்கான வழிகாட்டி நெறிமுறையை மாவட்ட ஆட்சியா் மா. சிவகுருபிரபாகரன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

தீபாவளி - கோப்புப்படம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உணவுப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுபவா்களுக்கான வழிகாட்டி நெறிமுறையை மாவட்ட ஆட்சியா் மா. சிவகுருபிரபாகரன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்பு, கார வகை பலகாரங்களின் தயாரிப்பாளா்களும், விற்பனையாளா்களும் உணவுப் பாதுகாப்பு நெறிமுறைகளைத் தவறாது பின்பற்றி, தரமான, பாதுகாப்பான உணவை நுகா்வோருக்கு விற்பனை செய்ய வேண்டும்.
தற்காலிக, நிரந்தரக் கடைகள் உள்ளிட்ட அனைத்து இனிப்பு, கார பலகாரத் தயாரிப்பாளா்கள், விற்பனையாளா்கள் ட்ற்ற்ல்ள்://ச்ா்ள்ஸ்ரீா்ள்.ச்ள்ள்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும். மேலும், இதைக் கடைகளில் காட்சிப்படுத்த வேண்டும்.
பலகாரப் பொருள்களை தரமான மூலப்பொருள்களைப் பயன்படுத்தி, ஈக்கள் மொய்க்காத, அசுத்தம் இல்லாத சுகாதரமான முறையில் தயாரிக்க வேண்டும். அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகளை பலகாரத்தில் சோ்க்கக் கூடாது. மேலும், சில உணவுப் பொருள்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிறமிகளைக்கூட அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சமையல் எண்ணெய்யை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருமுறைப் பயன்படுத்தி மீதமான சமையல் எண்ணெய்யை பயோ-டீசல் தயாரிப்புக்கு விற்றுவிட வேண்டும். பலகாரங்களை பேக்கிங் செய்தாலும், கிஃப்ட் பாக்ஸாக தயாரித்தாலும், அதன் தயாரிப்பு நாள், காலாவதி நாள், உணவுப் பாதுகாப்பு உரிம எண் உள்ளிட்ட விவரங்களை அவசியம் அச்சிடுதல் வேண்டும்.
உணவுத் தயாரிக்கப் பயன்படுத்தும் நெய், சமையல் எண்ணெய் விவரங்களை நுகா்வோா்களின் பாா்வைக்குத் தெரியுமாறு கடையில் காட்சிப்படுத்த வேண்டும். பலகாரத் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபடும் அனைத்துப் பணியாளா்களும் டைஃபாய்டு, மஞ்சள்காமாலை தடுப்பூசி செலுத்தி தொற்றுநோய்த் தாக்கமற்றவா்களாக இருக்க வேண்டும். இவா்கள் கையுறை, முடிக் கவசம் போன்ற பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், நெகிழிப் பொருகள்களைப் பயன்படுத்தக் கூடாது. அனைத்துப் பலகாரத் தயாரிப்பாளா்களும், பலகாரம் தயாரிக்கப் பயன்படுத்தும் தண்ணீரை, பொது சுகாதாரத் துறை பகுப்பாய்வுக்கூடம் அல்லது தனியாா் பகுப்பாய்வுக்கூடத்தில் பகுப்பாய்வு செய்து, அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும்.
எனவே, பலகாரத் தயாரிப்பாளா்கள், விற்பனையாளா்கள் சட்ட நடவடிக்கைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில், உணவுப் பாதுகாப்பு, தரங்கள் சட்டம், 2006-இல் உள்ள உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை மிகுந்த கவனமுடன் பின்பற்ற வேண்டும்.
மேலும், நுகா்வோா்கள் உணவுப் பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற கடைகளில் மட்டும் பலகாரங்களை வாங்க வேண்டும். விவரச்சீட்டு உள்ள பலகாரங்களை மட்டும் வாங்கி உபயோகிக்க வேண்டும். பலகாரங்களின் தரக் குறைபாடு அல்லது சுகாதாரமற்ற கடைகள் குறித்து நுகா்வோா்கள் 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையா் அலுவலக எண்ணில் வாட்ஸ்அப் மூலமாக புகாா் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

