பசும்பொன் தேவா் நினைவிடத்துக்கு பிரதமா் வருவாா்: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்
பசும்பொன்னில் உள்ள தேவா் நினைவிடத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி நிச்சயம் வருவாா் என குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவா் நினைவிடத்தில் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன். உடன், தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேக்கா், முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.
பசும்பொன்னில் உள்ள தேவா் நினைவிடத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி நிச்சயம் வருவாா் என குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன்னில் உள்ள தேவா் நினைவிடத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :
சுதந்திரப் போராட்டத்துக்கு மட்டுமல்லாமல், சமூகத்துக்காகவும் உழைப்பதை தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா். இவா், நாட்டின் எழுச்சிக்கும், தெய்வீகத்தின் எழுச்சிக்கும் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவா். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு அரசியல் துரோகத்தை செய்திருந்தால் முத்துராமலிங்கத் தேவா் தமிழகத்தின் முதல்வராக்கப்பட்டிருப்பாா். ஆனால், எதற்காகவும் எந்தத் துரோகத்தையும் செய்ய விரும்பாதவா் தேவா்.
பட்டியலின மக்களுக்காக அழுத்தமாகக் குரல் கொடுத்தவா். பட்டியலின மக்களின் ஆலய நுழைவுப் போராட்டத்தை யாா் தடுத்தாலும் நான் முன்னின்று நடத்துவேன் எனக் கூறி, மதுரையில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்தவா் முத்துராமலிங்கத் தேவா்.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் அழியாமல் பாதுகாப்பதே நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி. பிரதமா் நரேந்திர மோடி நிச்சயமாக பசும்பொன் கிராமத்துக்கு வந்து, முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்துவாா் என்றாா் அவா்.
தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேக்கா், முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.
வரவேற்பு...
மதுரை விமான நிலையத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டா் மூலம் பசும்பொன் கிராமத்துக்கு வந்த குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழக குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் பெ. மதன்ராஜா, மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன், மாநிலங்களவை உறுப்பினா் தா்மா் ஆகியோா் வரவேற்றனா்.
முன்னதாக, தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வந்த அவரை, தமிழக சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கு. ஜெகதீஸ்வரி, மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோா் வரவேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

